காதலிக்க நேரமில்லை படத்தின் 'Its Breakup da' பாடல் நாளை ரிலீஸ்

nithya menon

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படம் காதலிக்க நேரமில்லை. இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடலான ‘என்னை இழுக்குதடி' &லாவண்டர் நேரமே சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான Its Breakup da என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்போஸ்டரில் நித்யா மேனன் கையில் சுத்தியுடம் மிகவும் கோபமாக காட்சியளிக்கிறார். இந்த பாடல் ஒரு பெண் தன் காதலனை பிரேக் அப் செய்யும் பாடலாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this story