கதை தான் முக்கியம், மொழி அல்ல - ராஷ்மிகா மந்தனா

கதை தான் முக்கியம், மொழி அல்ல - ராஷ்மிகா மந்தனா

தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.  இவர் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

கதை தான் முக்கியம், மொழி அல்ல - ராஷ்மிகா மந்தனா

தற்போது, இந்தியில் அனிமல் என்ற திரைப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருக்கிறார். வரும் டிசம்பர் 1-ம் தேதி படம் வெளியாகிறது. இந்நிலையில், அனிமல் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஷ்மிகா, தான் நடிகை ஆவேன் என்று நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு கதை தான் முக்கியம், மொழி முக்கியம் அல்ல என்றும், படத்தின் கதையை கேட்டு இயக்குநரை நம்புவேன் என்று கூறியிருக்கிறார். 

Share this story