இவானா நடித்துள்ள மதிமாறன் படத்தின் முன்னோட்டத்திற்கு அமோக வரவேற்பு

இவானா நடித்துள்ள மதிமாறன் படத்தின் முன்னோட்டத்திற்கு அமோக வரவேற்பு

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் இவானா. தமிழில் பாலா இயக்கிய நாச்சியார் படத்தின் மூலம் இவர் நாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்னதாக மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு இவானா மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் டுடே திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் மதிமாறன். மந்த்ரா வீரபாண்டியன் இப்படத்தை இயக்குகிறார். இதில் இவானா உடன் வெங்கட் செங்குட்டுவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். 

இந்நிலையில், தற்போது படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. 

Share this story