அதிக திரையரங்குகளில் வெளியாகும் ஜாக்கி சானின் 'கராத்தே கிட் லெஜண்ட்ஸ்

jackie chan

நடிகர் ஜாக்கி சான்  நடிப்பில் உருவான கராத்தே கிட் லெஜண்ட்ஸ் அதிக திரைகளில் வெளியாகிறது.


நடிகர் ஜாக்கி சான் , ஜேடன் ஸ்மித் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தி கராத்தே கிட் (The karate kid). தற்போது, இயக்குநர் ஜோனதன் எண்ட்விஸ்ட் இயக்கத்தில் ஜாக்கி ஜான், பென் வாங் உள்ளிடோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கராத்தே கிட்: லெஜண்ட்ஸ் (karate kid: legends). இப்படத்திலும் சிறுவனுக்கு கராத்தே பயிற்றுவிக்கும் மாஸ்டராக ஜாக்கி ஜான் நடித்துள்ளார்.


முன்னதாக, இப்படத்தின் ஆங்கில டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளின் டிரைலர்களும் கவனம் ஈர்த்தன. இப்படம் மே 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 
இதில், அமெரிக்காவில் 3500 - 5000 திரைகளிலும் கனடாவில் 900க்கும் மேற்பட்ட திரைகளிலும் படத்தை வெளியிட சோனி பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும், பான் இந்திய மொழிகளில் இந்தியாவில் இப்படம் வெளியாக உள்ளது. 

Share this story