விஜய் சேதுபதி படத்தில் மம்மூட்டி பதிலாக ஜாக்கி ஷெராஃப்

விஜய் சேதுபதி படத்தில் மம்மூட்டி பதிலாக ஜாக்கி ஷெராஃப்

விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியான ‘கடைசி விவசாயி’ திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. இந்த படத்தை ‘காக்கா முட்டை’  படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நல்லாண்டி என்ற முதியவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை வென்றார். இவர்களுடன்  யோகி பாபு, பசுபதி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.  இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். விவசாயிகளின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இப்படம் பேசியது. 

விஜய் சேதுபதி படத்தில் மம்மூட்டி பதிலாக ஜாக்கி ஷெராஃப்

இதைத் தொடர்ந்து தற்போதும் மீண்டும் ஒரு திரைப்படத்தில் மணிகண்டனும், விஜய் சேதுபதியும் இணைந்துள்ளனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மம்முட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் திடீரென இந்த கதை இணையத்தொடராக படமாக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதனால் அதிருப்தி அடைந்த மம்முட்டி படத்தில் இருந்து வௌியேறினார். இதனால், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஷெராஃப்  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 
 

Share this story