பிரம்மாண்டமாக படமாகும் சிபி சத்யராஜின் ‘ஜாக்சன் துரை’... ஷூட்டிங் குறித்து புதிய அப்டேட்

Jackson Durai

சிபிராஜ் நடிக்கும் ‘ஜாக்சன் துரை ’ இரண்டாம் பாகத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

நடிகர் சத்யராஜ் மற்றும் சிபிராஜ் இணைந்து நடித்த திரைப்படம் ‘ஜாக்சன் துரை’. கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான இப்படம் வித்தியாசமான ஹாரர் காமெடி கதைக்களத்தை கொண்டது. பி.வி.தரணிதரன் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. 

Jackson Durai

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு  7 ஆண்டுகள் கழித்து ‘ஜாக்சன் துரை’ இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ‘ஜான்சன் துரை இரண்டாம் அத்யாயம்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் சிபிராஜ் மீண்டும் இணைந்து நடித்து வருகின்றனர்.  பி.வி.தரணிதரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து வருகிறார். 

தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் உருவாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வரலாற்று பின்னணியில் உருவாகும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Share this story