12 ஆண்டுகள் கழித்து உருவாகும் ‘ஜான்சன்துரை’ இரண்டாம் பாகம்... சிபிராஜ் படத்தின் அறிவிப்பு !

12 ஆண்டுகள் கழித்து ‘ஜான்சன் துரை’ இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ‘ஜாக்சன் துரை’. வித்தியாசமான ஹாரர் காமெடியில் உருவான இப்படத்தில் சிபிராஜூடன் இணைந்து நடிகர் சத்யராஜூம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை பி.வி.தரணிதரன் இயக்கவுள்ளார்.
மேலும் இந்த படத்தில் பிந்து மாதவி, யோகிபாபு, கருணாகரன், மொட்ட ராஜேந்திரன், சக்காரி காபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஸ்ரீ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் வழக்கமான ஹாரர் படம் போன்று இல்லாமல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு 12 ஆண்டுகள் கழித்து ‘ஜாக்சன் துரை’ இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜான்சன் துரை இரண்டாம் அத்யாயம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தை தரணிதரனே இயக்கவுள்ளார். இந்த படத்தின் மூலம் சத்யராஜ் மற்றும் சிபிராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா ஆகிய படங்களுக்கு இசையமைத்த சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் உருவாகிறது. விரைவில் இந்த படத்தின் பணிகள் தொடங்கவுள்ள நிலையில் அட்டகாசமான டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.