‘கருப்பர் நகரம்’ – ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு.

photo

கோபி நயினார் இயக்கத்தில், நடிகர்கள் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு ‘கருப்பர் நகரம்’ என வைக்கப்பட்டுள்ளது.

photo

கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் கோபி நயினார். தொடர்ந்து நடிகை ஆன்ட்ரியாவை வைத்து ‘மனுஷி’ எனும் படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். படத்தின் முதல் தோற்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது அதன் பின் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நடிகர் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷை மைய்யமாக வைத்து அவர் இயக்க உள்ள புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘கருப்பர் நகரம்’ என பெயரிட்டுள்ளனர். இந்த டைட்டிலை இயக்குநர் வெங்கட்பிரபு வெளியிட்டுள்ளார்.

Share this story