குறட்டையை மையமாக வைத்து உருவாகும் புதிய படம்... ஹீரோ யார் தெரியுமா ?

manikandan

‘ஜெய் பீம்’ நடிகர் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. 

manikandan

சமீபத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மணிரத்னம். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் பேசப்படும் விதமாக இருந்தது. சினிமாவில் இளம் நடிகராக இருக்கும் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 

manikandan

அந்த வகையில் தற்போது புதிய படம் ஒன்றில் மணிகண்டன் நடிக்கவுள்ளார். ரொமொன்டிக் காமெடி படமாக உருவாகும் இப்படத்தை விநாயக் சந்திரசேகர் என்பவர் இயக்கவுள்ளார். ஒரு மனிதன் குறட்டை விடும் பிரச்சனையை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளது. 

manikandan

இந்த படத்தில் மீதா ரகுநாத் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் எம் ஆர் பி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கவுள்ளனர். ஷான் ரோல்டன் இசையில் உருவாக உள்ள இந்த படத்திற்கு ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இதற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 

 

Share this story