‘ஜெய் பீம்’ படத்திற்கு விருது இல்லையா ?... இதயம் நொறுக்கியதாக நடிகர் நானி வருத்தம் !

jai bhim

‘ஜெய் பீம்’ படத்திற்கு விருது கிடைக்காதது மிகுந்த வருத்தமடைய செய்ததாக நடிகர் நானி பதிவிட்டுள்ளார். 

கடந்த 2012- ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘புஷ்பா’ ஆகிய இரண்டு தெலுங்கு படங்களுக்கும் அதிக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

jai bhim

ஆனால் தமிழில் ‘கடைசி ‘விவசாயி’, ‘இரவின் நிழல்’ ஆகிய படங்களுக்கு மட்டும் விருது கிடைத்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. அதனால் தமிழக ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். 

jai bhim

 இந்நிலையில் தெலுங்கு நடிகர் நானி, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘ஜெய் பீம்’ படத்திற்கு விருது கிடைக்காதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இதயம் உடைந்துவிட்டது போன்ற எமோஜியை பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோன்று நடிகர் அசோக் செல்வன், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், இயக்குனர் சுசீந்திரன் உள்ளிட்டோர் ஜெய் பீம் படத்திற்கு விருது கொடுக்காததற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

 

Share this story