ஜெய் நடித்த பேபி & பேபி படத்தின் `தென்பாண்டி முத்துபோல' வீடியோ பாடல் ரிலீஸ்

jai

நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள பேபி & பேபி படத்தில் இருந்து `தென்பாண்டி முத்துபோல' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. 

baby and baby

நடிகர் ஜெய் அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் பேபி& பேபி. இத்திரைப்படத்தை பிரதாப் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெய்யுடன், யோகி பாபு, சத்யராஜ்,  கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ராஜேந்திரன், சேஷு, பிரத்தோஷ் மற்றும் பலர் என நகைச்சுவை நடிகர்களின் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. திரைப்படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் அடுத்த பாடலான 'தென்பாண்டி முத்துபோல' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை யுகபாரதி வரிகளில் திவாகர் மற்றும் மீனாட்சி இளையராஜா இணைந்து பாடியுள்ளனர். 

Share this story