‘ஜெய் பீம்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட அசத்தலான ஆக்ஷன் காட்சி வெளியீடு.

photo

த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, லிஜோமோல், மணிகண்டன் ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் ஜெய்பீம். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு தயாரான இந்த படம் பலரது பாராட்டுகளையும், சிலரது எதிர்ப்புகளையும் பெற்றது. இந்த நிலையில் படத்திலிருந்து நீக்கப்பட்ட மாஸ்ஸான சண்டை காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளனர். அக் காட்சி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

photo

இருளர் இனமக்களின் வாழ்வை வெளிச்சம் போட்டு காட்டிய ஜெய்பீம், தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. படம் எதிர்பார்த்ததை விட அமோக வரவேற்பை பெற்று பலதரப்பிலிருந்தும் பாராட்டுகளை பெற்றது. பலரும் படம் நிச்சயம் தேசிய விருதை பெறும் என கூறினர். அனால் அது பலிக்காமல் போகவே, பல பிரபலங்களும் இது குறித்த கேள்விகளை எழுப்பினர். இந்த நிலையில் படத்திலிருந்து நீக்கப்பட்ட அதிரடி சண்டை காட்சி வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.


அதாவது சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதியை ஒரு கும்பல் நீதிமன்ற வளாகத்துக்குள் வெட்ட வருகின்றனர். அவர்களை சூர்யா பந்தாடுகிறார். இதுதான் அந்த காட்சி. இதனை பார்த்த பலருமே பக்கா மாஸ் சீன், ஆனால் ஏன் இதை நீக்கினார்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share this story