அனிருத்தின் இசை,ரஜினி ,மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் நடிப்பில் - ‘ஜெயிலர் 2’

jailer 2

கடந்த 2023ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் தயாரிக்க, நெல்சன் திலீப் குமார் இயக்கி, ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர் 2’. வரும் 15ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இதில் ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு, மிர்னா மேனன் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ‘ஜெயிலர் 2’ படத்தின் ‘அல்ல போலேலோ’, ‘ஒன் சன், ஒன் மூன்’, ‘பிந்தாஸ்’ ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

 ‘ஜெயிலர் 2’ படத்தின்  டிரெய்லரில், டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ஜெயிலர் வேடத்தில் ரஜினிகாந்த் தோன்றுகிறார். அதிரடியான சண்டைக் காட்சிகள், ரஜினியின் அதிரிபுதிரியான பஞ்ச் வசனங்கள் என டிரெய்லர் முழுவதும் கூஸ்பம்ப்ஸ் ஆக அமைந்திருக்கிறது. இதே டிரெய்லரில் முதல் பாகத்தை போல் இந்த பாகத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அனிருத்தின் பின்னணி இசை டிரெய்லருக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

Share this story