ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர் 2’-எப்போது ரிலீஸ் தெரியுமா ?
‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர் 2’. இப்படத்தை சன் பிக்சர்ஸ் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், சந்தானம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு, மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி கேரளா, கோவை, கோவா எனப் பல்வேறு பகுதிகளில் பல கட்டங்களாக நடந்து வந்தது. இப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 15ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி வெளியான வீடியோவும் ரசிகர்களின் வரவேற்பை அதிகரித்தது. குறிப்பாக பின்னணியில் இடம் பெற்ற இசை பலரது பாராட்டை குவித்தது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அதற்கான புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி இப்பாடல் ‘அலா போலேலோ(Ala Bolelo)’ எனும் தலைப்பில் அனிருத் குரலில் உருவாகியுள்ளது. மேலும் நடிகை பூர்ணா சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளார். இவர் ‘கந்தகோட்டை’, ‘துரோகி’, ‘கொடி வீரன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

