கேரளாவில் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு… ரஜினியை காண ரசிகர்கள் கூட்டம்...

jalier

கேரளாவில் ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்தைப் பார்க்க ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘ஜெயிலர்’. விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்தனர்.இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் உலக அளவில் ரூ.600 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் வரவேற்பை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதற்கான படப்பிடிப்பு, கேரளா மாநிலம், அட்டகட்டி பகுதியில் நடைபெற்று வருகிறது.jailer 2

 

படப்பிடிப்பு தளத்துக்கு நேற்று வந்த நடிகர் ரஜினிகாந்தைக் காண, அவரது ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். அவர்களைப் பார்த்து கைகூப்பி ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார். ரஜினிகாந்தைப் பார்த்ததும் ரசிகர்கள் முழக்கமிட்டு, தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.


ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story