நெல்சன் ரொம்ப நன்றிப்பா.... வர்மன் கதாபாத்திரம் குறித்து நடிகர் விநாயகன் நெகிழ்ச்சி

நெல்சன் ரொம்ப நன்றிப்பா.... வர்மன் கதாபாத்திரம் குறித்து நடிகர் விநாயகன் நெகிழ்ச்சி


ஜெயிலர் திரைப்படத்தில் வர்மன் கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து மலையாள நடிகர் விநாயகன் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் படத்தை இயக்கியிருந்தார். இதில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, சிவராஜ்குமார், மோகன் லால், சுனில் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்தார். கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் தமிழ்நாடு மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அதிரடி கிளப்பி வசூலை அள்ளியது. அதன்படி, உலகம் முழுவதும் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது ஜெயிலர். படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத்திற்கு கார்களை பரிசாக வழங்கினார். இந்நிலையில், ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாகவும், வர்மன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்த மலையாள நடிகர் விநாயகன் தனது அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். இயக்குநர் நெல்சனுக்கு அவர் நன்றி தெரிவித்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

Share this story