விஜய் கொடுத்த நம்பிக்கையில் ரஜினியிடம் கதை சொன்னேன் - ‘ஜெயிலர்’ விழாவில் இயக்குனர் நெல்சன் பேச்சு !

nelson

நடிகர் விஜய் கொடுத்த நம்பிக்கையில் தான் ரஜினியிடம் கதை சொன்னேன் என்று இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார்.

ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ளது ‘ஜெயிலர்’ திரைப்படம். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினி இந்த படத்தில் நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

nelson

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு பிரம்மாண்டமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ‘காவாலா’ பாடலுக்கு நடனமாடி நடிகை தமன்னா அசத்தினார். அதன்பிறகு ஹூக்கும் பாடலை ரசிகர்களுடன் இணைந்து அனிரூத் பாடி அசத்தினார். 

nelson

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ‘ஜெயிலர்’ கதை சொல்வதற்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால் பயப்படமான அவரிடம் கதை சொல்ல எனக்கு நம்பிக்கை அளித்தது நடிகர் விஜய் தான். போய் கதை சொல்லு, நல்லாயிருக்கும் என்று கூறினார். 

மேலும் பேசிய அவர், ஜெயிலர் ஷூட்டிங்கின் போது ரஜினி என்னிடம் ஒரு முறை கூட நெகட்டிவாக பேசியதில்லை என்றும், என்னை சார் என்று அழைத்ததாகவும் அவர் தெரிவித்தார். இதுதான் என்னுடைய முதல் இசை வெளியீட்டு விழா என்றும் இதுவரை 4 படங்களை இயக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Share this story