சூப்பர் ஸ்டாரை பார்த்து ஆர்ப்பரித்த ஹுக்கும் பாடலாசிரியர்... ஆனந்த கண்ணீர் விட்டு நெகிழ்ந்த வீடியோ வைரல் !

jailer

‘ஜெயிலர்’ ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்த ரஜினிகாந்த் பார்த்து பாடலாசிரியர் சூப்பர் சுபு ஆர்ப்பரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'ஜெயிலர்' திரைப்படம் உருவாகியுள்ளது. ஜெயில் கதைக்களம் கொண்ட இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஒய்வுபெற்ற ஜெயிலராக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். 

jailer

இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்காக சூப்பர் ஸ்டார் வந்தார். அப்போது ரஜினியை  பார்த்த பாடலாசிரியர் சூப்பர் சுபு ஆர்ப்பரித்த வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ரஜினிகாந்த் வந்தவுடன் அவரை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றுள்ள ஹுக்கும் மற்றும் ஜுஜுபி ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த இரண்டு பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் சூப்பர் சுபு. அதில் சூப்பர் ஸ்டாரின் மாஸை காட்டும்  ஹுக்கும் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Share this story