சூப்பர் ஸ்டார் பட்டம் வேணாம்.. அது எனக்கு தொல்லைதான் - நடிகர் ரஜினிகாந்த் !

jailer

சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு தொல்லைதான் என ‘ஜெயிலர்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஹூக்கும் பாடலை கேட்டபோது தாறுமாறாக இருந்தது. ஆனால் அதில் இருக்கும் சூப்பர் ஸ்டார் வார்த்தையை நீக்குமாறு கேட்டுக்கொண்டேன். சூப்பர் ஸ்டார் பட்டம் எப்போதும் எனக்கு தொல்லைதான். 

jailer

 ரொம்ப வருஷத்திற்கு முன்னரே சூப்பர் ஸ்டார் பட்டத்தை நீக்க சொன்னேன். கமல் ரொம்ப பெரிய நடிகராக இருந்தாரு. சிவாஜியும் ஹீரோவா நடிச்சிட்டு இருந்தாரு. அதனால் சூப்பர் ஸ்டார் பட்டம் வேணாம்னு சொன்னேன். ஆனா ரஜினி பயந்துவிட்டார் என்று சொன்னாங்க. நான் பயப்படுவது இரண்டு விஷயத்திற்காகதான். ஒன்று கடவுளுக்கு, இரண்டாவது நல்ல மனிதர்களுக்கு. நல்ல மக்களின் சாபம் கண்டிப்பா நம்மை காயப்படுத்தும். 

சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், சர்ச்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த விளக்கத்தை ரஜினி கொடுத்துள்ளார். அதேபோன்று ‘ஜெயிலர்‘ படத்திலும் ஹூக்கும் பாடலில் சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வரிகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Share this story