“முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன்…” – ‘ஜெயிலர்’ வெளியாகி மூன்றே நாட்களில் 200 கோடியா!
ரசிகர்களின் ஏகோபித்த ஆதவிற்கு மத்தியில் கடந்த 10ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். ஜெயிலர் ரசிகர்களை சிறைபிடிப்பாரா என காத்திருந்த அனைவருக்கும் தரமான விருந்தாக படம் அமைந்தது. இந்த நிலையில் படம் வெளியாகி மூன்றே நாட்களில் பாக்ஸ் அபிஸில் படம் சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நெல்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் தரமான பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடி வருகிறது. தற்போதைய தகவல்படி படம் வெளியாகி மூன்றே நாட்களில் ரூபாய் 200 கோடியை வசூலித்துள்ளது. 200 கோடியை கடக்கும் ரஜினிகாந்தின் ஆறாவது இதுவாகும். இந்த மகிழ்ச்சியான தகவலை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.