‘ஜெயிலர்’ ஸ்பெஷல்- தியேட்டரில் ஹுக்கும் பாடல் பாடி அசத்திய ‘அனிருத்’.

photo

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிரடி மாஸ் ஆக்ஷனில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. ரஜினி ரசிகர்கள் பட வெளியீட்டை திருவிழாபோல கொண்டாடி வருகின்றனர். தியேட்டர் வாசலில் தோரணங்கள், கட் அவுட்டுகள், பேனர்கள் என கலைகட்டியுள்ளது. இந்த நிலையில் முதல் காட்சி வெளியீட்டை கூடுதல் ஸ்பெஷலாக மாற்ற பாடகர் அனிரூத் தியேட்டரில் ரசிகர்களுடன் படத்தை பார்த்துவிட்டு ஹுக்கும் பாடலை லைவாக பாடி அசத்தியுள்ளார்.


படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக காவாலா, ஹுக்கும் பாடல்களுக்கு ரசிகர்கள் வைப் செய்து வருகின்றனர். இந்த நிலையில்  வெற்றி திரையரங்கிற்கு ஜெயிலர் FDFS பார்க்கவந்த ரசிகர்கள் முன்னிலையில்  ஹுக்கும் பாடலை லைவ்வாக பாடி அசத்தியுள்ளார். அதில் அனிரூத் பாட பாட ரசிகர்களும் உடன் பாடுகின்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Share this story