ஜெயிலர்: இரண்டாவது வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்.

photo

சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி  வெளியான திரைப்படம் ஜெயிலர். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கடந்து இரண்டு வாரத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

photo

ஆரம்பத்திலுருந்து பட்டையை கிளப்பி வசூல் சாதனை படைத்து வந்த ஜெயிலர்  தற்போது காத்து வாங்குவதாகவும் அதனால் வசூல் வெகுவாக குறைந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் முதல் நாளில் 96 கோடியும், இரண்டாவது நாளில் 56 கோடியும், மூன்றாவது நாளில் 69 கோடியும் வசூலித்தது. இப்படி படிபடியாக உயர்ந்த ஒரு வார முடிவில் படம் உலகம் முழுவதும் 375 கோடியை வசூலித்தது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.  தொடர்ந்து இரண்டாவது வார முடிவில் படம் வெறும் 175 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாம். குறிப்பாக  படம் பாக்ஸ் ஆபிசில் இருந்தே வெளியேறிவிட்டதாக தகவல் வந்துள்ளது. முதல் வாரம் குதிரை வேகத்தில் ஓடிய ஜெயிலர் தற்போது ஆமை வேகத்தில் நகர ரஜினிகாந்த, யோகி ஆதித்யநாத சர்ச்சை காரணமாக இருக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.

Share this story