கேங்ஸ்டராக மிரட்டப்போகும் மோகன்லால்... 'ஜெயிலர்' ஸ்பெஷல் அப்டேட் !

jailer

'ஜெயிலர்' படத்தில் நடிகர் மோகன்லால் கேங்ஸ்டராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவ ராஜ்மோகன், யோகிபாபு. வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

 jailer

இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். அதனால் முழுக்க முழுக்க ஜெயிலில் நடப்பது போன்று காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 

jailer

சமீபத்தில் இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் மோகன்லால் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகர் மோகன்லால் கேங்ஸ்டராக நடித்து வருகிறார்‌. இந்த தகவல் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

 

Share this story