‘காவாலா’ பாடலுக்கு ஆட்டம் போட ‘தமன்னா’ வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா!

photo

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் கூட்டணியில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில்  படத்தில் இடம்பெற்ற காவாலா படலுக்கு அசத்தல் ஆட்டம் போட்ட நடிகை தமன்னா எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகி பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

photo

அனிருத் இசையில் வெளியான ஜெயிலர் பட பாடல் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது குறிப்பாக படத்தில் இடம் பெற்ற ஹுக்கும் மற்றும் காவாலா பாடல்களை கூறலாம். அதிலும் காவாலா படலுக்கு தமன்னா ஆடிய அதே ஸ்டெப்பை ஆடி ரீல்ஸ் செய்து தங்களது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டு வந்தனர் ரசிகர்கள். இது ஒருபுறம் இருக்க படத்தில் கையை ஆட்டி ஆட்டம் போட தமன்னா சுமார் 3 கோடிவரை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.  அதேப்போல ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் 80 லட்சரூபாயும், கெஸ்ட் ரோலில் நடித்த மோகன் லால் ரூபாய் 8 கோடிவரை சம்பளமாக பெற்றாதாக தகவல் வெளியாகி பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

Share this story