‘ஜெயிலர்’ - சென்சார் செய்யப்பட்ட மாஸ் சீன்; எடிட்டர் கொடுத்த தகவல்.

photo

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.  இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி என பெரிய நட்சத்திர பட்டாளமே  நடித்திருந்தனர். இந்த நிலையில் படத்தின் எடிட்டரான நிர்மல் சென்சார் செய்யப்பட்ட காட்சிகள் குறித்து பதிவிட்டுள்ளார்.

photo

அதாவது படத்தில் சூப்பர் ஸ்டார் புகைக்கும் காட்சிக்கு பிறகு மூன்று மாஸ்ஸான காட்சிகள் இருந்தது. அவை சுமார் பத்து வினாடிகள் ஓடக்கூடிய வேற லெவல் கூஸ்பம்ஸ் காட்சி என தெரிவித்துள்ளார். இதனை கேட்டதிலிருந்து ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாக, தொடர்ந்து அதை நீக்கப்பட்ட காட்சிகளாக வெளியிடுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  ஜெயிலர் படம் வெளியானதிலிருந்து திரையரங்கங்களில் ஹவுஸ் புல்லாக ஓடிவரும் நிலையில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வெளியான மூன்றே நாட்களில் 200 கோடிக்கு மேல் வசூலித்து பலரையும் வாய் பிளக்க வைத்தது குறிப்பிடத்தகக்து.

Share this story