‘ஜெயிலர்’ திருவிழா- விடிய விடிய கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

photo

ஒட்டு மொத்த திரையுலகமே எதிர்பார்த்து காதிருந்த   ‘ஜெயிலர்’ படம் இன்று உலகம்முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.  படத்தின் FDFS பார்க்க தியேட்டர் முன்பு ரசிகர்கள் திருவிழா கூட்டம் போல கூடியுள்ளனர். மேளதாளம் முழங்க, கட்டவுட்டிற்கு பாலபிஷேகம் செய்து படத்தை உற்சாகமாக வரவேற்ற ரசிகர்களின் வீடியோ இணையத்தில் அதிகமாக வலம்வருகிறது.

photo

நெல்சன் இயக்கத்தில் தயாராகியுள்ள  இந்த படத்தில்  சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் தரமான பாடல்கள் உருவாகியுள்ளது. இந்த நிலையில் சென்னை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் என பல ஊர்களிலும் ரசிகர்கள்  உற்சாகமாக படம் பார்க்க தியேட்டர் முன்பு குவிந்துள்ளனர். தமிழகத்தில் காலை 9 மணிக்கு ஷோ திரையிடப்பட்டது. பல தியேட்டர் முன்பு பட்டாசு வெடித்து, இனிப்புகள், அன்னதானம் வழங்கி ரஜினி ரசிகர் மன்றத்தினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


 

Share this story