அட.. முதல் நாளிலேயே 100 கோடியா ?.. வாயை பிளக்கும் ‘ஜெயிலர்‘ வசூல் !

‘ஜெயிலர்’ திரைப்படம் முதல் நாளிலேயே 100 கோடியை தாண்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். குடும்பம், குடும்பமாக சென்று படத்தை பார்த்து வருகின்றனர்.
கடைசியாக ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ போதிய வெற்றியை பெறாததால் இந்த படத்தை வெற்றிப் படமாக கொடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் ரஜினி இருந்தார். அதனால் படக்குழுவினரின் கடின உழைப்பிற்கு பிறகு உருவான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுள்ளது. இது படக்குழுவினரையும், ரஜினி ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இப்படம் முதல் நாளிலேயே சுமார் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி முதல் நாளில் உலகம் முழுவதும் 105 கோடியை வசூலித்துள்ளதாம். தமிழகத்தில் 26 கோடியும், ஆந்திரா,தெலுங்கானாவில் 12 கோடியும், கர்நாடகாவில் 11 கோடியும், கேரளாவில் 4.5 கோடியும், வட மாநிலங்களில் 10 கோடியும், வெளிநாடுகளில் 30 கோடியும் வசூலித்துள்ளதாம். அதன்படி பார்த்தால் முதல் நாள் வசூல் 100 கோடியை எட்டியிருக்கும் என தகவல்கள் தெரிகின்றன.