பிரம்மாண்டமாக நடைபெறும் ‘ஜெயிலர்’ ஆடியோ லாஞ்ச்.. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கவின் !

jailer
ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவ ராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக் ஷெராஃப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

jailer

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அனிரூத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் வரவேற்பை பெற்று வருகிறது. 

jailer

இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் உள்ள உள்ளரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. நடிகர் கவின் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியுள்ள இந்த நிகழ்ச்சி ரஜினி ரசிகர்களால் நிரம்பி வருகிறது. சற்று முன்னர் நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிரூத் உள்ளிட்டோர் அரங்கிற்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story