மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார்.. ‘ஜெயிலர்’ செகண்ட் சிங்கிள் ப்ரோமோ வீடியோ !

HukumPreview

ஜெயிலர் படத்தின் ‘Hukum’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

சூப்பர் ஸ்டார் படம் என்றாலே மாஸான நடிப்பு, ஸ்டைல் ஆகியவை இல்லாமல் இருக்காது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் ஸ்டைலான நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்‘. ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ளார். 

HukumPreview

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

HukumPreview

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் தமன்னாவின் அசத்தலான ஆட்டத்தில் வெளியான ‘காவாலா’ பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான Humkum என தொடங்கும் பாடல் வரும் 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்பாடலின் ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில்  மாஸான வசனங்கள், கெத்துக்காட்டும் காட்சிகள் என அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 


 


 

Share this story