சாதனைக்குமேல் சாதனை படைக்கும் ‘ஜெயிலர்’- மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

photo

கடந்த 10ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுவரும் சூப்பர் ஸடார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் தற்போது புது சாதனை ஒன்றை படைத்துள்ளது.

photo

பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வரும் ஜெயிலர் படம் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு பக்கா ட்ரீடாக அமைந்துள்ளது. குறிப்பாக படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் காவாலா பாடல், ஹிக்கும் பாடல் வேற லெவல்ஹிட். பலரும் இந்த பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து தங்களது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டாரின் பெருமையை பேசும் மாஸ் பாடலான ஹுக்கும் பாடல் spotify –ல் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த முதல் தென்னிந்திய பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது.  இந்த மகிழ்ச்சியான தகவலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தின் வசூல் ஒருபுறம் பலரையும் வாய்பிளக்க வைக்கும் நிலையில் மற்றொரு புறம் படத்தின்  பாடல் சாதனை படைத்துள்ளது.

Share this story