‘தீ குரலில் ஜூஜூபி பாடல்‘.. பட்டையை கிளப்பும் ‘ஜெயிலர்’ 3வது பாடல் !

‘ஜெயிலர்’ படத்தில் பாடகி தீ பாடிய ஜூஜூபி பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்‘. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நாளை மறுநாள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
இதையொட்டி இப்படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே அனிரூத் இசையில் காவாலா மற்றும் ஹூக்கும் பாடல் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மூன்றாவது பாடலான ஜூஜூபி பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பாடகி தீ பாடியுள்ள இந்த பாடலை சூப்பர் சுபு எழுதியுள்ளார். இந்த பாடல் வரவேற்பை பெற்றுள்ளது.
ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிரட்டலான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.