100 மில்லியன் லிஸ்டில் இணைந்த ‘ஜெயிலர்’ பாடல்.

photo

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. அனிரூத் இசையில் வெளியான படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஃபஸ்ட் சிங்கிளாக வெளியான ‘காவாலா’ பாடலும் அதற்கு தமன்னா ஆடிய ஆட்டமும் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. அடுத்து வெளியான Hukum பாடலிற்கு பலரும் வைப் செய்து வருகின்றனர்.

photo

இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் பாடலான காவாலா பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. அதாவது அனிரூத் இசையில் 100 மில்லியனை கடக்கும் 20வது பாடல் இதுவாகும் இந்த தகவலை தலைவரின்  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து தலைவரின் 170வது திரைப்படத்திலும் அனிரூத்தான் இசையமைக்க உள்ளார்.  சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தகக்து

Share this story