‘தமன்னா’ ரசிகர்களுக்காகவே புது புரொமோவை வெளியிட்ட ‘ஜெயிலர்’ படக்குழு.

photo

அண்ணாத்த படத்திற்கு பிறகு சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். அதனால் தமிழகம் மட்டுமல்லமல் சர்வதேச அளவில் படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் Show case வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்பை  மேலும் அதிகரித்தது.  அதன் தொடர்ச்சியாக படத்தின் புது புரொமோ தற்போது வெளியாகியுள்ளது.

அனிரூத் இசையில் உருவாகி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அதிரிபுதிரி ஹிட்டானது.குறிப்பாக காவாலா பாடலும் அதற்கு தமன்னா ஆடிய நடனமும் வேற லெவல், பலரும் அதற்கு வைப் செய்தனர். இது ஒருபுறம் இருக்க Show caseஐ பார்த்த தமன்னா ரசிகர்கள் டிரைலரில் தமன்னா எங்கே என கேள்வி எழுப்பினர். அதற்காகவே தற்போது ஜெயிலர் படக்குழு புது புரொமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ரஜினிகாந்தின் காட்சிகள் மற்றும் தமன்னா காவாலா பாடலுக்கு அட்டகாசமாக ஆடும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.

Share this story