அனிரூத் இசையில் தாறுமாறாக உருவாகியுள்ள ‘ஜெயிலர்‘ பாடல்கள்... முழு ஆடியோ வெளியீடு !

jailer

அனிரூத் இசையில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் முழு ஆடியோ தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்‘. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 

jailer

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

jailer

தற்போது இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி இப்படத்தின் முழு ஆடியே தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அனிரூத் இசையில் மாஸாக உருவாகியுள்ள இந்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. காவாலா, ஹூக்கும், ஜூஜூபி ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story