ஒரு வாரத்தில் அசுர வேட்டை... வசூல் சாதனை படைத்த ‘ஜெயிலர்’ !

jailer

‘ஜெயிலர்‘ திரைப்படம் ஒரு வாரத்தில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அலப்பறை கிளப்பியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. சூப்பர் ஹிட்டடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட படைப்பாக உருவான இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிரூத் இசையமைத்துள்ளார். அனிரூத்தின் இசையில் உருவான பாடல்கள் அனைத்து பட்டையை கிளப்பி வருகிறது. 

jailer

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியனாக இந்த படத்தில் கலக்கி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகத்தை தாண்டி, மற்ற மொழிகளில்ம், வெளிநாடுகளில் கூட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

அதனால் இந்த படம் ஒரு வாரத்தில் வசூல் சாதனையை படைத்துள்ளது. இதுவரை 400 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் ஒரு வார வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் 7 நாட்களில் 375 கோடியே 40 லட்சம் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் கேரியரில் ‘2.O‘ படத்திற்கு பிறகு ‘ஜெயிலர்’ திரைப்படம் தான் இந்த வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

Share this story