முன்பதிவின் மூலமே இத்தனை கோடியா! கலெக்ஷனை துவங்கிய ‘ஜெயிலர்’.

Jailer

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’   இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சூப்பர் ஸ்டாரின் மாஸ் ஆக்ஷனில் இன்னும் மூன்றே நாட்களில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கியது. தற்போது அதன் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

Jailer

அதன்படி தமிழகத்தில் முன்பதிவை துவங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.  பல இடங்களில் முதல் நாள் ஹவுஸ்புல் ஆகியுள்ளதாம். அதன்படி கர்நாடகவில் 95சதவீத டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது அதன் மூலம் கிடைத்த வருவாய் மட்டும் 2 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. அதேப்போல வெளிநாடுகளிலும் நல்ல வசூல் கிடைத்துள்ளது அமெரிக்காவில் 6 லட்சம் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 2 கோடி, இங்கிலாந்தில் 2 லட்சம் பவுண்ட் இந்திய மதிப்பில் 2 கோடிக்கு மேல், கனடாவில் 1 லட்சம் டாலர் இந்திய மதிப்பில் 80ஆயிரத்திற்கு மேல் வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் தவிர்த்து மொத்தமாக 10 கோடிக்குமேல் ப்ரீ புக்கிங்கில் மட்டும் வசூல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story