பட்டையை கிளப்பும் ‘ஜெயிலர்’ ப்ரோமோஷன்... அசத்தலாக நடனமாடிய தமன்னா !

‘ஜெயிலர்’ படத்தின் ப்ரோமோஷனில் நடிகை தமன்னா அசத்தலாக நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரஜினி, நேர்மையான போலீசாக இருக்கும் தனது மகனை வில்லன்களிடமிருந்து மீட்கும் கதைதான் இந்த படம். ரஜினியின் மாஸான நடிப்பு, ஸ்டைலிஷ்ஷான லுக் என அனைத்தும் இருக்கும் இந்த படம் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்து படைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்ளிரங்கத்தில் நடைபெறவுள்ளது.
அதேநேரம் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமன்னா, காவாலா பாடலுக்கு அசத்தலாக நடனம் வீடியோ வெளியாகியுள்ளது. சமீபத்தில் தமன்னாவின் துள்ளலான நடனத்தில் வெளியாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.@tamannaahspeaks kick starts Jailer promotions in the north💥#Jailer Releasing on August 10th🔥@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @sindhujas13 @raqueebalam @AlwaysJani #Jailer #RajiniTheJailer pic.twitter.com/KUulju3v4n
— Sun Pictures (@sunpictures) July 27, 2023