அப்பா - மகன் உறவு பேசும் ‘ரத்தமாரே‘ லிரிக்கல் பாடல்... ‘ஜெயிலர்’ அடுத்த பாடல் வெளியீடு !

JAILER -Rathamaarey Lyric Video

‘ஜெயிலர்’ படத்திலிருந்து ‘ரத்தமாரே’ லிரிக்கல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர்’ படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முத்துவேல் பாண்டியனாக நடிகர் ரஜினி மிரட்டலாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது மகனை மீட்கும் தந்தையாக இந்த படத்தில் அவர் நடித்துள்ளார். 

jailer

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

jailer

சமீபத்தில் இந்த படத்தின் ஷேகேஸ் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கு முன்னரே அனிரூத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ரத்தமாரே என்ற ‘லிரிக்கல்’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தந்தை மகன் உறவு குறித்து பேசும் இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story