“இது Tiger-ன் கட்டளை”... மாஸாக வெளியான ‘ஜெயிலர்’ செகண்ட் சிங்கிள் அறிவிப்பு !

jailer

ரஜினிகாந்த் நடிப்பில உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது பாடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் லுக்கில் நடித்து வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

jailer

ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தமன்னாவின் அசத்தலான ஆட்டத்தில் சமீபத்தில் வெளியான ‘காவாலா’ பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனிரூத்தின் தாறுமாறான இசையில் உருவாகியுள்ள வரும் ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Humkum என தொடங்கும் இந்த பாடல் இது டைகர் கட்டளை என்ற பைலைனுடன் உள்ளது. இதையொட்டி வெளியாகியுள்ள ரஜினியின் கிளிம்ப்ஸ் வீடியோ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

null


 

Share this story