ஷூட்டிங்கிற்காக கொச்சிக்கு பறந்த ‘ஜெயிலர்’... வைரலாகும் ரஜினிகாந்தின் வீடியோ !

jailer

‘ஜெயிலர்’ படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் கொச்சி செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. கடந்த சில ஆண்டுகளில் நடிகர் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் போதிய வரவேற்பை பெறவில்லை. இதற்கு காரணம் அவர் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிப்பதில் என்று கூறப்படுகிறது. அதை மாற்றும் விதமாக தனது வயதான தோற்றத்தில் ரஜினி நடிக்கிறார். அவரின் கதாபாத்திரம் குறித்து புகைப்படங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

jailer

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில் உள்ளிட்ட பல மொழி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் திட்டமிட்டதற்கு முன்னரே வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

jailer

இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இறுதிக்கட்ட காட்சிகளை படமாக்க ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் நேற்று கொச்சிக்கு சென்றுள்ளனர். இது குறித்த மாஸான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

 

Share this story