போய் வேலையை பாரு.. ரசிகரை அன்பாக கண்டித்த சூப்பர் ஸ்டார்.. வைரலாகும் வீடியோ !

rajini

 ரஜினியை பார்க்க வந்த ரசிகர்கரை அன்பாக கண்டித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இந்த   படத்தில் ஜாக்கி ஷெராப், மோகன்லால், சுனில், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவ ராஜ்மோகன், யோகிபாபு. வசந்த் ரவி, விநாயக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

rajini

இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ஜெயிலராக ரஜினி நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலம் மங்களூரில் நடைபெற்று வருகிறது. 

rajini

இந்த படப்பிடிப்பை முடித்த ரஜினி, மங்களுர் விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் ரஜினி பின்னாடியே வந்து லவ் யூ தலைவா என கூறினார். அதற்கு எல்லா இடத்திற்கும் வராதீங்க.. போய் வேலைய பாருங்க. வேலைதான் முக்கியம் என்று அன்பு கட்டளையிட்டார். தற்போது இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 


 

Share this story