‘குட்டி செவுத்த எட்டி பாத்தா….. show Case பாத்த கோடி பேரு’- அலப்பறை கிளப்புறோம்!

photo

நேற்று ஜெயிலர் படத்தின் Show Case வெளியான நிலையில் இன்று யூடியூபில் 10 மில்லியனுக்கும் அதிகமான பாரவையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

photo

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ‘அண்ணாத்த’.   அதன் பிறகு சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது ‘ஜெயிலர்’ படம் உருவாகியுள்ளது. அதனாலேயே ரசிகர்கள் இந்த படத்தை காண ஆவலாக உள்ளனர். அதிலும் படத்தின் டிரைலர், Show Case என்ற பெயரில் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியது. வெளியான ஒரு மணிநேரத்தில் சுமார் 2 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்தது. தற்போது 19 மணி நேரத்தில் 10 மில்லியன் அதாவது ஒரு கோடிக்கும் அதிகமான  பார்வையாளர்களை  பெற்றுள்ளது. இதனை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

நெல்சன் இயக்கத்தில் தயாராகியுள்ள  இந்த படத்தில்  சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிரூத் இசையில் தரமான பாடல்கள் உருவாகியுள்ளது வரும் 10ஆம் தேதி படம் வெளியாக உள்ளது  குறிப்பிடத்தக்கது.

Share this story