‘ஒவ்வொரு ப்ரேமும் நெருப்பு’.... தலைவர் தெறி மாஸ் .. ஜெயிலரை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ் !

jailer

‘ஜெயிலர்’ படத்தின் ஒவ்வொரு ப்ரேமும் நெருப்பாய் இருப்பதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். 

நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் தனது மகனுக்கு எதிரிகளால் ஆபத்து ஏற்படுது. அதனால் தனது குடும்பத்தையும், மகனையும் எவ்வாறு முத்துவேல் பாண்டியன் காப்பாற்றுகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை. சூப்பர் ஸ்டார் அதிடி அக்ஷனில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது. 

எப்போதும் போல் சூப்பர் ஸ்டாரின் மாஸான காட்சிகளுக்கும், ஸ்டைலான லுக்கிற்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. அதோடு நெல்சனின் வழக்கமான காமெடி கலாட்டாக்களும் ரசிக்க வைத்துள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். 

jailer

இந்நிலையில் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெற்றியை ரசிகர்களுடன் இணைந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூம் கொண்டாடி வருகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பேச வார்த்தை இல்லை. சிலிர்ப்பு... அசாதாரண எழுத்தாலும், நகைச்சுவை காட்சிகளாலும் இயக்குனர் நெல்சன் அதகளம் செய்துள்ளார். அனிரூத்தின் இசை சிறப்பாக அமைந்துள்ளது. தலைவர் தெறி மாஸாக உள்ள இந்த படத்திற்கு தலை வணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 


 


 

Share this story