‘ஜெயிலர்’ வெற்றியால் மகிழ்ச்சியில் கலாநிதி.. இயக்குனர் நெல்சனுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் !

jailer

‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ள தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குனர் நெல்சனுக்கு சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ்  தயாரிப்பில் வெளியான இப்படம் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான நிலையில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் தமிழை தாண்டி, தெலுங்கு, மலையாள ஆகிய மொழிகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 

jailer

சுமார் 200 கோடியில் உருவான இப்படம்  500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தற்போது பல திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாகி திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் கெரியரில் வரலாற்று சாதனை படைத்த படமாக இப்படம் உருவாகியுள்ளது. 

இந்த படத்தின் மாபெரும் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ள தயாரிப்பாளர் கலாநிதிமாறன், தனது லாபத்தில் ஒரு பகுதியும், BMW சொகுசு கார் ஒன்றையும் பரிசாக வழங்கினார். இதையடுத்து இயக்குனர் நெல்சனுக்கு ஒரு பெரிய தொகையை கொடுத்துள்ளார். அதேநரம் ‘ஜெயிலர்’ படத்தில் பணியாற்றியதற்காக 10 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

Share this story