‘ஜெயிலர்’ சுமார் தாங்க……’- சக்சஸ் மீட்டில் ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்ய தகவல்.

photo

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ பட மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து படத்தின் சக்சஸ் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சூப்பர் ஸ்டாரின் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

photo

இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான படங்களுள் ஒன்று ‘ஜெயிலர்’. மக்கள் மத்தியில் அமோக வெற்றி பெற்று வசூலில் பட்டையை கிளப்பிய இந்த படம் சுமார் 700 கோடி வசூலித்து சாதனை  படைத்தது. அதனை கொண்டாடும் விதமாக படத்தின் இயக்குநர் நெல்சன், நடிகர் ரஜினி, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்கினார் தயாரிப்பாளர். அது மட்டுமல்லாமல் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்டும் வகையில் அவர்களுக்கு கறி விருந்து, தங்க காசு, கேடயம் ஆகியவை வழங்கப்பட்டது.

இதனை வழங்கி சிறப்பித்த ரஜினி படம் குறித்தும், சக்சஸ் மீட் குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது” ஜெயிலர் படம் வெற்றி மகிழ்ச்சியா இருக்கு. கலா சாருக்கு நன்றி, உண்மையா சொல்றேன் கலா சார் கொடுத்த கார்லதான் வந்தேன், அப்போதான் நான் பணக்காரன் அப்படின்ற ஃபீல் வந்தது. படத்த ரீ ரெக்காடிங்குக்கு முன்னாடி பாத்தேன் ஆவரேஜாதான்  இருந்தது. அதுல அனி செய்த மாயம் படத்த எங்கையோ தூக்கிட்டு போய்ட்டு. அவரோட இசை படத்துக்கு முக்கிய காரணம், நண்பனோட படம் ஜெயிக்க கடினமா உழைச்சாரு அனி. படத்த பாத்த கலா சார்கிட்ட படம் பேட்ட அளவுக்கு இருக்கான்னு கேட்டேன், பேட்டையா… 2023 பாஷா சார் அது என அவர் கூறினார். படம் வெளியாகி 5 நாள்தான் நான் சந்தோஷமா இருந்தேன், அப்புறம் இதே மாதிடி ஹிட்டைதான் அடுத்த படத்துக்கும் எதிர்பார்ப்பாங்க என தேன்றி பயமானது. இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார் ரஜினி.

Share this story