“தலைவரு நிரந்தரம் நெல்சா”... நெல்சனிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அனிரூத் !
‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இசையமைப்பாளர் அனிரூத் பதிவிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றனர். ரசிகர்கள் இந்த படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். சிலை கடத்தும் கும்பல் கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக முத்துவேல் பாண்டியனாக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு அனிரூத்தின் இசை மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் அனிரூத் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு, ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. அதில் ‘தலைவரு நிரந்தரம் நெல்சா’ என்று ‘ஜெயிலர்’ வெற்றியை கொண்டாடும் விதமாக பதிவிட்டுள்ளார்.