இது முத்துவேல் பாண்டியனின் மிரட்டல்.. நாளை வெளியாகும் ‘ஜெயிலர்’ டிரெய்லர் !

jailer

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு தீனிப்போடும் விதமாக உருவாகியுள்ளது ‘ஜெயிலர்’ திரைப்படம். ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலராக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவரின் தோற்றம் மிகவும் ஸ்டைலிஷ்ஷாகவும், மாஸாகவும் இருக்கிறது. 

jailer

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் திட்டமிட்டப்படி படத்தை வெளியிட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ லாஞ்ச் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து தற்போது டிரெய்லருக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story