இனி பேச்சே கிடையாது…. வீச்சுதான்…..- டைகர் முத்துவேல் பாண்டியன் பிரசண்ட்……

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிரடியான ஆக்ஷனில் ‘ஜெயிலர்’ படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்த படத்தின் டிரைலர் Show Case என்ற பெயரில் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தலைவர் பெயர் டைகர் முத்துவேல் பாண்டியன் என்றும் படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்கது என்பதும் தெளிவாக தெரிகிறது. அதிலும் ரஜினிகாந்த் சொல்லும் ‘இனி பேச்சே கிடையாது…. வீச்சுதான்….’ என்ற வசனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.