வரலாற்று வெற்றியை பெற்ற ‘ஜெயிலர்’.. லாபத்தில் ஒரு பகுதியை ரஜினியிடம் கொடுத்த கலாநிதிமாறன் !

rajini

 ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ரஜினிக்கு ஒரு பங்கு லாபத்தை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கொடுத்துள்ளார். 

 சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இப்படத்தில்  முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ளார்.  

rajini

ஆக்ஷன் அதிரடியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான இப்படம் தமிழகத்தை தாண்டி மற்ற மொழிகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 

தற்போது வரை இப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பாளர் கலாநிதிமாறன், தனது லாபத்தில் ஒரு பகுதியை நடிகர் ரஜினிகாந்திடம் கொடுத்தார். இந்த சந்திப்பின் புகைப்படம் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

Share this story

News Hub