‘ஜெயிலர்’ பட வெற்றி – ஊழியர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசளிப்பு.

photo

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஊழியர்களுக்கு வெள்ளி நாணயத்தை பரிசாக வழங்கியுள்ளது சன் குழுமம்.

photo

ரசிகர்களின் ஏகோபித்த ஆதவிற்கு மத்தியில் கடந்த  மாதம் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் வெளியான   இந்த படத்தில்  சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன்மோகன்லால்ஜாக்கி ஷெராஃப்சிவ ராஜ்குமார்சுனில்தமன்னாயோகிபாபுவிநாயகன்வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையில் தரமான பாடல்கள் வெளியானது. ஜெயிலர் ரசிகர்களை சிறைபிடிப்பாரா என காத்திருந்த அனைவருக்கும்  தரமான விருந்தாக படம் அமைந்தது. இந்த நிலையில் படம் வெளியான முதலேயே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. இந்த நிலையில் படம் ரூ. 600 கோடி வரை வசூல் செய்து சாதனை படத்தது.

photo

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பு நிறுவனமான சன்குழுமம் தனது ஊழியர்கள் அனைவருக்கும் தலா 25 கிராம் வெள்ளி காயியனை பரிசாக வழங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this story